கருப்பு இதயத்தை உள்ளுக்குள் சுமந்து,
வெண்ணிற ஆடையை வெளியில் அணிந்தவாறு
உன் கருப்பு நிற வீட்டை வலம் வருகின்றேன்,
என் இதயம் வெண்மையாக வேண்டுமென்று...
தவாப்
வெட்ட வெளியில் சுட்டெரிக்கும் வெயிலில்
சுற்றி சுற்றி வருகின்றேன்,
உன் ரஹ்மத் எனும் அருள் என் பாவக் கரைகளை
சுட்டெரிக்க வேண்டுமாய்...
அரபா
ஒரு பச்சிளங் குழந்தையின் தாகத்தை தீர்க்க
பரிதவிப்போடு அலை மோதிய தடங்களில்...
பாவத்தின் பாதைகளில் அலைந்து திரிந்த பாதங்களை நட மாட விடுகிறேன்...
தொங்கோட்டம்.
மாநாடு என்றால் பல்லாயிரம் பேர் ஒன்று கூடி ஒருவன் பேசுவதை கேட்டு ரசிப்பார்கள்.
இங்கே பல்லாயிரம் பேரின் புலம்பல்களை, உள்ளக் குமுறல்களை நீ ஒருவன் மட்டுமே கேட்டு ரசிக்கிறாய்.
வினோதம் நிறைந்த மாநாடு...
ஹஜ்.
கண்ணீர், புலம்பல், எதிர்பார்ப்பு, வலி,வேதனை,தனிமை போன்ற
கலவைகளில் குழந்தை வெளியாவது போல,
நானும் வெளியாகின்றேன் அன்று பிறந்த பாலகனாய்...
அற்புதமான பிரசவம்.