WELCOME

ASSALAMU ALAIKUM WR WB...

Friday, January 28, 2011

KAVIKO KAVIDHAIKAL

நபிகள் பெருமான் -

இல்லாமல் வாடிய

ஏழை உலகம்,

கேட்காமலேயே

கிடைத்த அருட்கொடை !

தட்டாமலேயே

திறந்த கதவு !

தேடாமலேயே

தெரிந்த மூலிகை !



இளமையில் பெற்றோரை

இழந்த இவ்வனாதைதான்

உலகுக்கே தாயாகி

ஊட்டி வளர்த்தவர் !



படிக்கத் தெரியாத – இந்தப்

பாமர நபியிடம்தான்

பள்ளிக் கூடங்களும்

பாடம் பயின்றன

இல்லை ..

பல்கலைக் கழகங்களே

பாடம் பயின்றன !



கந்தல் அணிந்த – இந்தக்

கருணைநபி கையால்தான்

அம்மண உலகம்

ஆடையைப் பெற்றது !



பாலையில் முளைத்த – இந்த

பசுமர நிழலில்தான்

வெயிலும்கூட

இளைப்பாற வந்தது !



இந்த ஏழையை

ஈன்ற பின்னரே

கிடக்காத புதையல்

கிடைத்தது போன்று

இந்த உலகம்

இறுமாப் படைந்தது !



மண்ணில் – இந்த

மணிவிளக்கைக்

கண்டபின்தான்

விண்ணும்தன் சுடர்களுக்காய்

வெட்கம் கொண்டது !



வல்லூறுகளும் – இவர்

வலைக்குள் குடிபுகுந்து

வெள்ளைப் புறாக்களாய்

விண்ணெங்கும் பறந்தன !



உயர்மறை மகுடி – இவர்

ஊதியத்கைக் கேட்டவுடன்

நாகத்தின் பற்களிலும்

நல்லமுதம் ஊறியது !



தனித்தனி சாதி

அறைகளில் கிடந்த

மனித எழுத்துக்களை

ஒரே வாக்கியமாக

அச்சுக் கோர்த்து

சகோதரத்துவ

சமுதாயம் கண்டவர் !



பாட்டால் புகழைப்

பலர் பெறுவர் – ஆனால்

பரமனின் நபியைப்

பாடுவதால் நமது

பாட்டுக்கல்லவா

பெரும்புகழ் கிடைக்கும்



அன்று – அந்தத்

தாயிப் நகரில்

தாஹா நபிகள் !



தாயிப் வாசிகளே !

விந்தை மனிதர் நீர்!

கல்லின் மீதுதான்

பூவைத் தூவுவீர்



ஆனால் அன்று

(பூமான் நபியெனும்)

பூவின் மீதல்லவா

கல்லைச் சொரிந்தீர் !



வெல்வதாக நினைத்தீர் !

ஆனால் – தோற்றவர் நீங்களே !

நீங்கள் வணங்கும்

கற்களை அல்லவா

கருணைநபி காலடியில்

மண்டியிட வைத்தீர் !



உங்கள் கற்கள்

ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !

பொறுமைக்குக் கிடைத்த

இரத்தினப் பதக்கங்கள் !

இறை சோதனையின்

குங்கும முத்தங்கள் !



பொய்மையை எதிர்த்த

வாய்மைத் தூதருக்கு

ரணங்கள் தானே

ஆபரணங்கள் !



அதோ பாருங்கள் !

நீங்கள் எறிந்த கற்கள்

பச்சை ரத்தம்

படிந்து கிடப்பதை !

காயங்கள் செய்த

பிரச்சாரத்திற்குரிய

பெரிய வெற்றி !

அவை கூட

மதம் மாறி விட்டன !



தாயிப் வாசிகளே !

கனிமரம் என்பதால்

கல்லெறிந்தீரோ?

கல்லடி பட்டால்

கனி மட்டுமா உதிரும்?

காய்கூட உதிருமே !



ஆனால்

கல்லடிக்குக்

கனிமட்டும் உதிர்ந்த

கருணை மரத்தை

வேறு எங்கேனும்

கண்டவருண்டோ?



எங்கள் பெருமான்

காயம்பட்டதோ

அன்றொருநாள் !

ஆனால் இரத்தமோ

இன்றுமல்லவா வழிகிறது

எங்களின்

எழுதுகோல் வழியே

முள்

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !


எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்ன்ன காக்க!

மலரிடம் சொன்னது முள்....



"இப்படியும் சில பழமொழிகள்"




◦எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்


◦ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

◦ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்

◦ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

◦கார் ஓட டயரும் தேயும்

◦சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு

◦சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

◦தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

◦தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

◦துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

◦பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

◦மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

◦முடியுள்ள போதே சீவிக்கொள்

◦பழகின செறுப்பு காலை கடிக்காது

◦மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

◦ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

Friday, January 14, 2011

  

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !
சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் .

Cigarette

சிகரெட்டே 

விதவைகோலம் பூண்ட நீ, 
என்னை ஏன் விதவை ஆக்கினாய் ?